டி கோட்டாம்பட்டியில் அம்மணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
டி.கோட்டாம்பட்டியில் உள்ள அம்மணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொள்ளாச்சி
டி.கோட்டாம்பட்டியில் உள்ள அம்மணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அம்மணீஸ்வரர் கோவில்
பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில் அருளுடைய நாயகி உடனமர் அம்மணீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி விழா கடந்த 12-ந் தேதி மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையடுத்து முதற்கால யாக பூஜை, மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.காலை 9 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, வேதபாராயணம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம்
மாலை 6 மணிக்கு 3-ம் கால யாக பூஜை நடந்தது இரவு 8 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. நேற்று காலை 6.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, நாடிசந்தானம் நடந்தது. 8 மணிக்கு டி.கோட்டாம்பட்டி பொது மக்கள் சார்பில், அன்னதானம் நடந்தது. இதனை தொடர்ந்து 9.50 மணிக்கு ஸ்ரீஅருளுடைய நாயகி சமேத அமணீஸ்வரசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் விமரிசையாக நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதையடுத்து மாலை 3 மணிக்கு திருக்கல்யாண வைபவம், மாலை 5 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடந்தது. முனனதாக சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதோடு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் விமலா, செயல் அலுவலர் மணிகண்டன் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story