நடு பழனி மரகத தண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம்


நடு பழனி மரகத தண்டாயுதபாணி சாமி  கோவில் கும்பாபிஷேகம்
x

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த சித்தாமூர் அருகே உள்ள பெருக்கரணை நடு பழனி மரகத தண்டாயுதபாணி சாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.

இதையொட்டி நேற்று குடமுழுக்கு நீராட்டு அவதூத தத்த பீடத்தின் இளைய பீடாதிபதி பூஜ்ய ஸ்ரீ தத்த விஜயானந்த தீர்த்த சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். அச்சரப்பாகம் ஆட்சீஸ்வரர் கோவில் அர்ச்சகர் சங்கர சிவாச்சாரியார் யாக சாலை நிகழ்வுகளை நடத்தி வைத்தார்.

கோவில் அறக்கட்டளை மூலம் சிறப்பாக நடத்தப்பட்ட இந்த விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகள் நடுபழனி முருகன் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Next Story