செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்


செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 15 March 2022 1:14 PM GMT (Updated: 2022-03-15T18:44:28+05:30)

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்க்கும் நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சாலைவசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 210 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்கு 6 பயனாளிகளுக்கு இயற்கை மரண ஈமச்சடங்கு நிவாரண நிதித் தொகை ரூ.1,22,500 மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் செயலராக பணிபுரிந்து கொரோனா தொற்றினால் காலமான ஜி.வடிவேல் என்பவரின் மகன் வ.ஹரிஸ் என்பவருக்கு அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணியாற்ற பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், மாவட்ட கலெக்டர்கள் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story