இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2022 10:10 PM IST (Updated: 17 March 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கோவை

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள கமலாமில் குட்டை பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. அதே பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. அங்கு பொதுமக்கள் தினமும் வழிபாடு நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அந்த டாஸ்மாக் கடையை ஒட்டி தற்போது புதிதாக பார் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்தநிலையில் டாஸ்மாக் கடை மற்றும் பார் ஆகியவற்றை அகற்றக்கோரி பாரதீய ஜனதா மற்றும் இந்து மக்கள் கட்சி, சிவருத்ர சேனா உள்ளிட்ட இந்து அமைப்பினர், பொதுமக்கள் சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


Next Story