படப்பை அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது
படப்பை அருகே பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவரை கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே 42 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மர்மநபர் பெண்ணிடம் தண்ணீர் கேட்டுள்ளார். பின்னர் போனுக்கு சார்ஜ் போட வேண்டும் என்று கூறிக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்து கதவை பூட்டுவிட்டு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அப்போது மர்மநபரிடம் இருந்து தப்பித்து வெளியே வந்த பெண் கூச்சலிட்டு அலறியுள்ளார். அந்த சமயத்தில் மர்ம நபர் அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து வட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 40) என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story