பொள்ளாச்சியில் 3 கார் தீப்பிடித்து எரிந்தது


பொள்ளாச்சியில் 3 கார் தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 20 March 2022 10:57 PM IST (Updated: 20 March 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் 3 கார் தீப்பிடித்து எரிந்து நாசம் ஆனது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில்தனியாருக்கு சொந்தமான எம்.பி.ஆட்டோ கேர் என்ற பெயரில் கார் விற்பனை நிலையம் உள்ளது, இங்கு 3 கார்கள் வெளியே நிறுத்தி உள்ளனர்,  திடீரென ஒரு காரின் முன் புறம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. பின், அருகில் இருந்த மற்ற 2 கார்கள் மீதும் தீ பரவி மளமளவென எரிய தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் காணப்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்ேபரில் சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், காரின் முன்புறம் பேட்டரி வெடித்து தீ பற்றி மற்ற 2 காரிலும் பிடித்து இருக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். பொது மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் திடீரென கார்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story