நெகமம் பகுதியில் விலை வீழ்ச்சியால் காலிபிளவர் செடிகளை டிராக்டர் மூலம் அழிக்கும் விவசாயிகள்

விலை வீழ்ச்சி எதிரொலியால் நெகமம் பகுதியில் டிராக்டர் மூலம் காலிபிளவர் செடிகளை விவசாயிகள் டிராக்டர் மூலம் அழித்து வருகிறார்கள்.
நெகமம்
விலை வீழ்ச்சி எதிரொலியால் நெகமம் பகுதியில் டிராக்டர் மூலம் காலிபிளவர் செடிகளை விவசாயிகள் டிராக்டர் மூலம் அழித்து வருகிறார்கள்.
காலிபிளவர் சாகுபடி
நெகமம், சின்னநெகமம், உதவிபாளையம், என்.சந்திராபுரம், வீதம்பட்டி, வி.வேலூர், சாலைப்புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விளை நிலங்களில் விவசாயிகள் காலிபிளவர் சாகுபடி செய்து உள்ளனர். இங்கு விளையும் காலிபிளவர் பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. தற்போது விலை குறைந்துள்ளதால் காலிபிளவர் பூக்களை பறிக்காமல் செடியிலேயோ விட்டு உள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
டிராக்டர் மூலம் அழிப்பு
காலி பிளவரை பொறுத்தவரை 65 நாட்களில் காய்ப்பு திறனுக்கு வந்துவிடும். காய்ப்பு திறன் வந்த ஒரு வாரத்தில் அவற்றை பறித்து மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு அனுப்பி வைப்பார்கள். தற்போது நெகமம் பகுதியில் விளையும் காலிபிளவர்களுக்கு கடந்த சில நாட்களாக கட்டுப்படியான விலை இல்லாததால் காலிபிளவர் செடிகள் அனைத்தையும் மாடுகளை விட்டு மேய்ச்சலுக்கு விட்டனர். இன்னும் ஒருசிலர் டிராக்டரை விட்டு அந்த செடியை காலிபிளவருடன் அளித்து விடுகின்றனர்.
பெரும் நஷ்டம்
மேலும் காலிபிளவர் 1 கிலோ ரூ.5-க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ ரூ.15- க்கு விற்பனை ஆனால் தான் விவசாயிகளுக்கு கட்டுபடியாகும்.குறைந்த விலைக்கு விற்பனை ஆவதால் ஆட்கள் கூலி, வண்டி வாடகை, கமிஷன் போன்றவற்றிக்குக்கூட விலை கிடைப்பதில்லை. இதனால தோட்டங்களில் காலிபிளவரை பறிக்காமல் செடியிலேயே விட்டு அழிக்கும் அவல நிலை உள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் உரிய இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






