மெட்ரோ ரெயில் பணிகளை மத்திய அரசு செயலாளர் ஆய்வு
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் பணிகளை ஆய்வு செய்த மத்திய வீட்டு வசதி நகர்ப்புற செயலாளர் மனோஜ் ஜோஷி, பணிகளை தரமாகவும், பாதுகாப்பாகவும், திட்டமிட்ட காலத்தில் விரைவாகவும் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
சென்னை,
சென்னையில் 2-ம் கட்டமாக 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்கப்படுகிறது. இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கான 3-வது வழிப்பாதை ரூ.2 ஆயிரத்து 732 கோடியில் நடந்து வருகிறது. இந்த சுரங்கப்பாதையில் 17 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இந்த ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 2 மார்க்கங்களிலும் சுரங்கப்பாதை வருகிறது.
இதில் திருவான்மியூர் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கி உள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் போது அருகில் உள்ள கட்டிடங்கள், குடியிருப்புகள் பாதிக்காத வகையில் மண் சரிவு ஏற்படாத வகையில் அதற்கான பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த சுற்றுச்சுவர் அமைக்கப்படுவதன் மூலம் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாது, சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் எளிதாக இருக்கும் என்பதால் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.
கலங்கரை விளக்கம் பூந்தமல்லி
அதேபோல், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26 கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் ரூ.6 ஆயிரத்து 700 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப்பாதையும், கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை 16 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாதையும் அமைக்கப்படுகிறது.
இதில் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் பணிகள் நடந்து வருகிறது.
மத்திய அரசு செயலாளர் ஆய்வு
இந்தபணிகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை செயலாளரும், மெட்ரோ ரெயில் நிறுவன தலைவருமான மனோஜ் ஜோஷி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குறிப்பாக போரூரில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட தூண்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ், இயக்குனர்கள் டி.அர்ச்சுனன், ராஜேஷ் சதுர்வேதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story