தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி


தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 22 March 2022 2:41 PM IST (Updated: 22 March 2022 2:41 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மோர் பந்தல் மற்றும் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், மாநில துணை தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், வி.பி.சுவாமி, செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் மாநில- மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல்களை திறக்க வேண்டும் என்று பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு, அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.

Next Story