மறைமலைநகர் அருகே கட்டிட தொழிலாளி அடித்து கொலை - வாலிபர் கைது


மறைமலைநகர் அருகே கட்டிட தொழிலாளி அடித்து கொலை - வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 March 2022 7:34 PM IST (Updated: 23 March 2022 7:34 PM IST)
t-max-icont-min-icon

மறைமலை நகர் அருகே கட்டிட தொழிலாளியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள ரோஜா தோட்டம் மெயின் ரோடு பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன் (வயது 65). கட்டிட தொழிலாளியான இவருக்கு, வேலை செய்யும் இடத்தில் வேறோரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனால் மனோகரன், மனைவியை பிரிந்து அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். மனோகரன் கடந்த 13-ந் தேதி குடித்து விட்டு வீட்டில் தகாத வார்த்தைகளால் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மனோகரனுக்கு, தினேஷுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ், மனோகரனை கையால் அடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி கடந்த 20-ந் தேதி மனோகரன் உயிரிழந்தார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story