வடமாநில தொழிலாளி தவறி விழுந்து சாவு
தூங்குவதற்கு லாரியில் ஏறிய போது வடமாநில தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
பொள்ளாச்சி
தூங்குவதற்கு லாரியில் ஏறிய போது வடமாநில தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வடமாநில தொழிலாளி
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப் சிங் (வயது 42). இவர் ஒப்பந்த தொழிலாளியாக பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் அதே வளாகத்தில் வடமாநில தொழிலாளர்களுடன் தங்கி இருந்தார்.
இதற்கிடையில் நுகர்பொருள் வாணிப கழக வளாகத்தில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் எப்போதும் அங்கு நிற்கும் லாரியின் மேல் ஏறி தொழிலாளர்கள் தூங்குவது வழக்கம்.
இந்த நிலையில் மற்ற தொழிலாளர்கள் சேலத்திற்கு வேலைக்கு சென்றதால், சந்தீப் சிங் மட்டும் இங்கு இருந்து உள்ளார். வேலை முடிந்ததும் மது அருந்தி விட்டு தூங்குவதற்கு லாரியில் ஏறியதாக தெரிகிறது. அப்போது கால் தவறி சந்தீப் சிங் கீழே விழுந்தார். தலையின் பின்பகுதியில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
ஆனால் அவர் விழுந்ததை நீண்ட நேரத்திற்கு பிறகு அங்கு உள்ளவர்கள் பார்த்து உள்ளனர். பின்னர் இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்தனர்.
பின்னர் சந்தீப் சிங்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story