பொள்ளாச்சியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 March 2022 7:20 PM IST (Updated: 24 March 2022 7:20 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் சி.எஸ்.பி. வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க கிளை தலைவர் சீதாராமன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், சி.எஸ்.பி. வங்கி போதுமான லாபத்தை ஈட்டி உள்ள போதும் 11-வது நிதிக்குழு ஒப்பந்தப்படி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை. இதை கண்டித்து வருகிற 28-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிடப்பட்டு உள்ளது என்றனர்.

Next Story