வனவிலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர்


வனவிலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர்
x
தினத்தந்தி 24 March 2022 10:16 PM IST (Updated: 24 March 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

வனவிலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

போத்தனூர்

கோவை வனக்கோட்டத்தில் போளுவாம்பட்டி, மதுக்கரை, கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் மான், காட்டு யானைகள், கரடி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

 தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. மேலும் பசுைம தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர்த்தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக வனத்துறையினர் வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை தீர்த்து வருகின்றனர்.


இந்த நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுட்டு வருகின்றனர். மதுக்கரை வனச்சரகத்தில் மட்டும் மொத்தம் 17 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கரடிமடை பிரிவில் 4 தொட்டிகளும், நவக்கரை பிரிவில் 13 தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

 இங்கு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதற்கிடையில், வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் உள்ளதா? வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதா? என்பதை கண்டறிய ஒவ்வொரு பகுதிகளிலும் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story