சூறாவளி காற்றுக்கு வாழைகள் சாய்ந்தன
செட்டிபாளையம் அருகே சூறாவளி காற்றுக்கு வாழைகள் சாய்ந்தன.
போத்தனூர்
கோவையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் நேற்று முன்தினம் மதியத்துக்கு பிறகு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென பரவலாக கோடைமழை பெய்தது. குறிப்பாக செட்டிப்பாளையம், கோவைப்புதூர் உள்ளிட்ட இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை கொட்டியது.
இதனால் வெப்பம் குறைந்து குளிர்ந்த காலநிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் செட்டிபாளையத்தை அடுத்த மயிலாடும்பாறை அருகே விவசாயி பழனிசாமிக்கு சொந்தமான தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்தன.
இதேேபான்று சில விவசாயிகளின் தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழைகளும் சாய்ந்து விழுந்தன. இதனால் அவர்கள் கவலை அடைந்தனர். மேலும் இதற்கு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story