நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்
நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை மற்றும் அமைச்சர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்துகொண்டு சான்றிதழை வழங்கினர்.
செங்கல்பட்டு மாவட்டம் தோமையார் மலை ஒன்றியம் சோழிங்கநல்லூர் நகர கூட்டுறவு துறை கடன் சங்கங்கள் சார்பில் பொது நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சோழிங்கநல்லூர் கருணாநிதி சாலையில் நடைபெற்றது. மேடவாக்கத்தை சேர்ந்த பொதுகடன் தள்ளுபடி செய்யப்பட்ட 358 பயனாளிகளுக்கும், சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பொதுகடன் தள்ளுபடி செய்யப்பட்ட 843 பயனாளிகளும் சான்றிதழ் பெறவுள்ளனர். இதில் முதல் கட்டமாக இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்த 40 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு சான்றிதழை வழங்கினர்.
இதில் சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் கூட்டுறவு சங்க தலைவர் ஞானமூர்த்தி, மேடவாக்கம் கூட்டுறவு சங்க தலைவர் திருநீலகண்டன், சோழிங்கநல்லூர் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் கருணா மற்றும் மாநகராட்சி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story