திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ெரயில் தென்காசி வழியாக இயக்கம்
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் 2-ந்தேதி வரை தென்காசி வழியாக இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
பொள்ளாச்சி
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் 2-ந்தேதி வரை தென்காசி வழியாக இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
தண்டவாள பணிகள்
பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு ரெயில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு காலை 6.30 மணிக்கு வருகிறது.
பின்னர் திருச்செந்தூருக்கு மாலை 3.45 மணிக்கு செல்கிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு இரவு 8.30 மணிக்கும், பாலக்காட்டிற்கு 9.30 மணிக்கும் செல்கிறது. இந்த நிலையில் மதுரை ரெயில்வே கோட்டத்தில் கோவில்பட்டியில் இருந்து துலக்கப்பட்டி வரை 2-வது தண்டவாள இணைப்பு பணிகள் நடைபெறுகிறது.
தென்காசி வழியாக இயக்கம்
இதன் காரணமாக பாலக்காடு-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 2-ந்தேதி வரை மதுரை, ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, நெல்லை வழியாக திருச்செந்தூர் செல்கிறது. மறுமார்க்கத்தில் அதே போன்று இன்று முதல் 2-ந்தேதி வரை திருச்செந்தூரில் இருந்து நெல்லை, தென்காசி, மதுரை, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு செல்கிறது.
இதற்கிடையில் சாத்தூர், கோவில்பட்டி, காடம்புதூர், மணியாச்சி, தாழைத்து ரெயில் நிலையங்கள் வழியாக திருச்செந்தூர் ரெயில் இயக்கப்படாது. இந்த தகவல் ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story