ஆழியாறில் கோகோ சாகுபடியில் உயர்தொழில்நுட்ப பயிற்சி


ஆழியாறில் கோகோ சாகுபடியில் உயர்தொழில்நுட்ப பயிற்சி
x
தினத்தந்தி 25 March 2022 7:58 PM IST (Updated: 25 March 2022 7:58 PM IST)
t-max-icont-min-icon

ஆழியாறில் கோகோ சாகுபடியில் உயர்தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.


பொள்ளாச்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வாசனை, மலைத்தோட்டப்பயிர்கள் துறை, கொச்சி முந்திரி மற்றும் கோகோ மேம்பாட்டு இயக்கம் இணைந்து பொள்ளாச்சி அருகே ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோகோ சாகுபடியில் உயர்தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. இதற்கு தோட்டக்கலை கல்லூரி முதல்வர் புகழேந்தி தலைமை தாங்கி, தென்னையில் கோகோ மற்றும் ஜாதிக்காய் சாகுபடியின் சிறப்பு குறித்து பேசினார். திறந்தவெளி மற்றும் தொலைதூர கல்வி இயக்கத்தின் இயக்குனர் ஆனந்தன் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக வாசனை மற்றும் மலைத்தோட்ட பயிர்கள் துறை தலைவர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். விழாவில் கோகோவில் தரமான நாற்றுக்கள் உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் கவாத்து நீர் மற்றும் உர மேலாண்மை, நோய் மற்றும் பூச்சி மேலாண்மை ஆகிய தலைப்புகளில் விஞ்ஞானிகள் பேசினார்கள். மேலும் கோகோ சாகுபடி குறித்த கையேடு வெளியிடப்பட்டது. இதில் தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் பிரணீதா மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் ஆனந்த் வரவேற்று பேசினார்.

Next Story