வால்பாறையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வால்பாறையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வால்பாறை
வால்பாறை அரசு ஆஸ்பத்திரி இயற்கை மருத்துவம் மற்றும் யோக பிரிவு மையம் சார்பில் உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்பட்டது. வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகளின் காசநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக காசநோய் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.பின்னர் காசநோய் குறித்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரி இயற்கை மருத்துவம் மற்றும் யோக மையத்தின் டாக்டர் கார்த்திகேஷ் காசநோய் குறித்து பேசினார். இதனையடுத்து செஞ்சிலுவை சங்க அமைப்பின் மாணவ மாணவிகள் இணைந்து வால்பாறை நகரில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் பொறுப்பு பேராசிரியர் திருநாவுக்கரசு பேரணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு ஆஸ்பத்திரி முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் விஜயகுமார், சுகாதார பார்வையாளர் திவ்யா, ஆய்க தொழில்நுட்ப பணியாளர்கள் மணி, மலர்க்கொடி, ராஜ்பால் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story