பொள்ளாச்சி அருகே வேளாண் மாணவர்களுக்கு தென்னை நார் தொழில் பயிற்சி


பொள்ளாச்சி அருகே வேளாண் மாணவர்களுக்கு தென்னை நார் தொழில் பயிற்சி
x
தினத்தந்தி 25 March 2022 7:58 PM IST (Updated: 25 March 2022 7:58 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே வேளாண் மாணவர்களுக்கு தென்னை நார் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.



பொள்ளாச்சி

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு கிராமப்புற அனுபவ பயிற்சி திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிராம தங்கல் திட்டத்தின் கீழ், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமத்தில் 75 நாட்கள் தங்கி இருந்து விளைவிக்கப்படும் பயிர்கள், வேளாண் நடைமுறைகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி பொள்ளாச்சி அருகே ஜலத்தூரில் உள்ள ஒரு தென்னை நார் தொழிற்சாலைக்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் சென்றனர். அங்கு தென்னை மட்டையில் இருந்து தென்னை நாரை பிரித்து எடுப்பது, நார் துகள்களான காயர் பித்தை பயன்படுத்தி கட்டிகள் தயாரிப்பது குறித்து பயிற்சி பெற்றனர். மேலும் விவசாயத்திலும், மாடி தோட்டத்திலும் நார் துகள் கட்டியின் பயன்பாடு, வேலை வாய்ப்புகள் மற்றும் தென்னை நார் சார்ந்த பொருட்கள் விற்பனை, சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Next Story