கிணத்துக்கடவு தாலுகாவில் கள்ளச்சாராய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
கிணத்துக்கடவு தாலுகாவில் மதுபானம், கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகாவில் மதுபானம், கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு பிரசாரம்
கோவை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் கிணத்துக்கடவு தாலுகா பகுதிகளில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரசார நாடகங்கள் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி கிணத்துக்கடவு பஸ் நிலையம், கிணத்துக்கடவு பஸ் நிறுத்தம், வட புதூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 8 இடங்களில் விழிப்புணர்வு நாடகம் நடத்தி மேளதாளம் முழங்க பொதுமக்களுக்கு கள்ளச்சாராயம் மற்றும் அதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டன.
கண் பார்வை மங்குதல்
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதினால் தூக்கமின்மை, வாந்தி, வயிற்றுப்புண், காசநோய், உயர் இரத்த அழுத்தம், இருதய வீக்கம் ஏற்படுகிறது. மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. கண் பார்வை மங்குதல், கைகால் வலிப்பு ஏற்படுகிறது. கல்லீரல் பாதிக்கப்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணம் ஏற்படுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோட்ட கலால் துறை வருவாய் ஆய்வாளர் விமலா, கிணத்துக்கடவு கிராம நிர்வாக அதிகாரி வாசுதேவ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story