ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
தினத்தந்தி 25 March 2022 8:39 PM IST (Updated: 25 March 2022 8:39 PM IST)
t-max-icont-min-icon

ஐ.டி. நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை

கணபதி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஏத்தக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலகுரு. இவரது மகன் பாரதிராஜா(வயது 25). கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் பாரதிராஜா கடந்த 2 ஆண்டுகளாக ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக அவரிடம், திடீரென அந்த இளம்பெண் சரிவர பேசவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தார். 

இதற்கிடையில் பாரதிராஜா ஆன்லைன் முலம் ஒரு தனியார் நிறுவனத்திடம் ரூ.50 ஆயிரம் கடனாக பெற்றார். ஆனால் அந்த பணத்தை அவரால் திரும்ப செலுத்த முடியவில்லை. மேலும் கடனை திரும்ப கேட்டு அந்த நிறுவன பிரதிநிதிகள் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே காதலி சரிவர பேசாததால் மன உளைச்சலில் இருந்த அவர், கடன் தொல்லையும் அதிகரித்தால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை முடிவை எடுத்தார். 

அதன்படி பாரதிராஜா தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அந்த அறைக்கு அவரது தம்பி வந்தார். அவர் தனது அண்ணன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story