கோவில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது


கோவில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது
x
கோவில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது
தினத்தந்தி 25 March 2022 9:56 PM IST (Updated: 25 March 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

கோவில் பூட்டை உடைத்து திருடிய 3 பேர் கைது

கோவை
கோவை தெற்கு உக்கடம் சி.எம்.சி. காலனியில் மதுரை வீரன் கோவில் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் கோவில் பூசாரி வழக்கம் போல் சாமிக்கு பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் கோவில் நடை திறக்க வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

பின்னர் கோவில் உள்ளே சென்று பார்த்தார் அங்கு இருந்த தங்க காசுகள், சாமி கையில் இருந்த வாள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பூசாரி உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த நவீன் (வயது 21), விக்கி என்கிற விக்ர மார்தாண்டன் (20), குட்டி என்கிற பிரசாத் (20) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த தங்க நாணயம், வாள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் அங்கிருந்த ஒரு கடையில் ஒயர்களை திருடியது தெரியவந்தது. 

அதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வாளில் அலுமினியம் பெயிண்ட் பூசப்பட்டு இருந்தது. எனவே அது வெள்ளி வாளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதனை திருடியதாகவும், ஆனால் பின்னர் இது இரும்பு வாள் என்று தெரியவந்ததாகவும் அவர்கள் 3 பேரும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.


Next Story