அட்டகட்டியில் பாம்புகளை கையாள்வது குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி


அட்டகட்டியில் பாம்புகளை கையாள்வது குறித்து  வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 26 March 2022 4:57 PM IST (Updated: 26 March 2022 4:57 PM IST)
t-max-icont-min-icon

அட்டகட்டியில் பாம்புகளை கையாள்வது குறித்து வனத்துறை ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


வால்பாறை

வால்பாறை அருகே அட்டகட்டி பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வனமேலாண்மை பயிற்சி மையத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் உத்தரவின் பேரிலும் துணை கள இயக்குனர் அறிவுரையின் பேரிலும் வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய வனச்சரக பகுதிகளைச் சேர்ந்த வனத்துறை களப்பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாம்புகளை கையாளும் முறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. அட்டகட்டி பயிற்சி மையத்தின் உதவி வனப் பாதுகாவலர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருநாள் பயிற்சியில் தன்னார்வல அமைப்பினர் வனப் பகுதிக்குள் ரோந்து பணியில் ஈடுபடும் போது பாம்பு கடித்தால் அதற்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவிகள் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார்கள். மேலும் பாம்புகளை பிடிக்கும் போது அதற்கான அனைத்து உபகரணங்களையும் எடுத்துச் சென்று அவைகளின் மூலமாக மட்டுமே பாம்புகளை கையாள வேண்டும். அதிக விஷமுள்ள பாம்புகளை பிடிக்கும் போது எச்சரிக்கையாகவும் கவனமுடனும் பாம்புகளின் உடலில் காயங்கள் ஏற்படாமல் பிடித்து வனப் பகுதியில் விடவேண்டும் என்பது குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது. வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வனவர் முனியாண்டி மற்றும் பயிற்சி மைய பணியாளர்கள் செய்திருந்தனர்.

Next Story