வால்பாறை நகராட்சி துணைத்தலைவராக திமுக கவுன்சிலர் செந்தில்குமார் போட்டியின்றி தேர்வு
வால்பாறை நகராட்சி துணைத்தலைவராக தி.மு.க. கவுன்சிலர் செந்தில்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
வால்பாறை
வால்பாறை நகராட்சி துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம்ஞானதேவ் மேற்பார்வையில் வால்பாறையில் நடந்தது. இதில், ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம், தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த தேர்தலில் 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செந்தில்குமார் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துசாமி, செந்தில்குமாரை வால்பாறை நகராட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.
வால்பாறை நகராட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செந்தில்குமாருக்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, கவுன்சிலர்கள், நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார் மற்றும் நகராட்சி அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story