டாஸ்மாக் பார் ஊழியர் மீது தாக்குதல்


டாஸ்மாக் பார் ஊழியர் மீது தாக்குதல்
x
டாஸ்மாக் பார் ஊழியர் மீது தாக்குதல்
தினத்தந்தி 26 March 2022 8:34 PM IST (Updated: 26 March 2022 8:34 PM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் பார் ஊழியர் மீது தாக்குதல்

துடியலூர்
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் துடியலூரில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அங்கு வந்த 2 பேர் மது குடித்த னர். ஆனால் அவர்கள் வாங்கிய உணவு பொருட்களுக்கு பணம் தராமல் வெளியே செல்ல முயன்றனர். உடனே விக்னேஸ்வரன் அவர்களிடம் பணம் கேட்டார். 

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கள் 2 பேரும் பணம் தரமறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், விக்னேஸ்வரனை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராகவில் பதிவான காட்சிகளை வைத்து விக்னேஸ்வரனை தாக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story