தொழிற்சாலையில் விபத்து; டிரைவர் பலி
தொழிற்சாலையில் வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த டிரைவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார்.
படப்பை,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் சின்ன செங்குன்றம் பகுதியில் வந்தவர் அழகேசன்(வயது 30). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த பண்ருட்டி மேட்டுபாளையம் பகுதி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் டிரைவராக வேலை செய்து வந்தார். தொழிற்சாலையில் வாகனம் ஓட்டும் போது எதிர்பாராத விதமாக வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் குன்றத்தூர் கிழக்கு குளக்கரை தெருவில் வசித்து வந்தவர் மூர்த்தி (50). நெசவுத் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் குன்றத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள கடைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சேகர் (65), என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story