சுவாமி சகஜானந்தா மக்கள் நலப்பேரவையினர் ஆர்ப்பாட்டம்
காட்டுமன்னார்கோவிலில் சுவாமி சகஜானந்தா மக்கள் நலப்பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில்,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நந்தனார் சென்ற தெற்கு வீதியில் உள்ள தீண்டாமை சுவரை மத்திய, மாநில அரசுகள் திறக்க வலியுறுத்தி காட்டுமன்னார்கோவிலில் சுவாமி சகஜானந்தா மக்கள் நலப்பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் சம்பந்தம் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ரவிக்குமார், புரட்சி தமிழகம் மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் ரமேஷ் வரவேற்றார்.
பேரவை நிறுவனத் தலைவர் நாகராசன் கண்டன உரையாற்றினார். இதில் புரட்சித் தமிழகம் மாநில துணை செயலாளர் இளையராஜா, ஏழைகள் முன்னேற்ற கழகம் அர்ஜூனன், எல்.இ.பி. பேரவை பொட்டு ராமானுஜம், பஞ்சமி நில மீட்பு, போராட்டக்குழு திருமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story