இறந்து கிடந்த சிறுத்தைப்புலி
இறந்து கிடந்த சிறுத்தைப்புலி
வால்பாறை
வால்பாறை அருகே ஸ்டேன்மோர் எஸ்டேட் 21-ம் ெநம்பர் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தைப்புலி ஒன்று உடல் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அங்கு வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று, அழுகிய நிலையில் கிடந்த சிறுத்தைப்புலியின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் உள்ள வனத்துறையின் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் கணேசன் தலைமையில் வனத்துறையின் கால்நடை மருத்துவ அலுவலர் டாக்டர் சுகுமார் மூலம் சிறுத்தைப்புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்பின்னர் வனத்துறை டாக்டர் சுகுமார் கூறுகையில், இறந்த பெண் சிறுத்தைப்புலிக்கு 8 வயது முதல் 10 வயது வரை இருக்கும். வயது முதிர்ச்சி காரணமாக நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கலாம். உடற்கூறு பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு உள்ளது. ஆய்வுக்கு பிறகு சிறுத்தைப்புலி இறப்புக்கு உரிய காரணம் தெரியவரும் என்றனர். தொடர்ந்து சிறுத்தைப்புலியின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
Related Tags :
Next Story