வியாபாரியிடம் பணம் பறித்த 3 பேர் கைது
வியாபாரியிடம் பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து பறிமுதல் செய்தனர்.
மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம், 5-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகூர்மீரான் (வயது 43). ராஜாஜி சாலையில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு, கடையில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு சென்றனர்.
இதுகுறித்து நாகூர்மீரான் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கு தாம்பரம், லட்சுமி நகரைச் சேர்ந்த கணேஷ் குமார் (32), கிழக்கு தாம்பரம், இரும்புலியூரைச் சேர்ந்த அப்பு (21) மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு செயின், மோதிரம் உள்பட 26 கிராம் தங்க நகை, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு, இருசக்கர வாகனம் திருட்டு உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story