திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற 5 பேர் கைது; மதுபாட்டில்கள் பறிமுதல்


திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற 5 பேர் கைது; மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 March 2022 6:34 PM IST (Updated: 28 March 2022 6:34 PM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், ஊரப்பாக்கம், பகுதிகளில் திருட்டுத்தனமாக மதுபானங்களை விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரகசிய தகவல்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி கூட்ரோடு டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மது விற்றுக் கொண்டிருந்த நந்திவரம் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 42), என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுபாட்டில்கள் பறிமுதல்

இதேபோல கூடுவாஞ்சேரி தைலாவரம் டாஸ்மாக் கடை அருகே திருட்டுத்தனமாக மதுபானம் விற்ற சென்னை பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(37) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஊரப்பாக்கம் ஆதனூர் ரோடு பகுதியில் திருட்டுத்தனமாக மதுபான விற்றுக்கொண்டிருந்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் (32), தூத்துக்குடியை சேர்ந்த கவி (23), ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து, 10 மதுபாட்டில்களளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் மறைமலைநகர் டான்சி பஸ் ஸ்டாப் அருகே மதுபானம் விற்றுக் கொண்டிருந்த தேவகோட்டை பகுதியை சேர்ந்த கவாஸ்கர் (வயது 23), என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story