மறியல் போராட்டம் நடத்திய 1318 பேர் கைதாகி விடுதலை
மறியல் போராட்டம் நடத்திய 1318 பேர் கைதாகி விடுதலைமறியல் போராட்டம் நடத்திய 1318 பேர் கைதாகி விடுதலை
கோவை
மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தபால் தந்தி அலுவலகம் முன்பு அனைத்து கூட்டு நடவடிக்கை குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க நிர்வாகி சண்முகம் தலைமை தாங்கினார். மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த பத்மநாபன், எல்.பி.எப். ரத்தினவேல், எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்கத்தைசேர்ந்தத நிஷ்தார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 125 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் 351 பேர் கைது செய்யப்பட்டனர்.
குனியமுத்தூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 65 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்காநல்லூர் என்.ஜி.ஆர். சிலை அருகில் மறியல் போராட்டம் நடத்திய 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கவுண்டம்பாளையம், சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உள்பட 13 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
கோவையில் 644 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 1,318 பேர் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story






