கஞ்சா விற்ற 2 பேர் கைது

x
தினத்தந்தி 28 March 2022 10:41 PM IST (Updated: 28 March 2022 10:41 PM IST)
கஞ்சா விற்ற 2 பேர் கைது
கணபதி
கோவை ரத்தினபுரி 7-வது வீதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ரத்தினபுரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (வயது24), சிவானந்தாகாலனி பகுதியைச் சேர்ந்த கண்ணன் (21) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





