படப்பை அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய வழக்கில் மேலும் 4 பேர் கைது

படப்பை அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் பெரியார் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவரை கடந்த மாதம் 6 பேர் சேர்ந்து ஹெல்மட், கல், மற்றும் கம்புகளால் தாக்கினர். இது சம்பந்தமாக கார்த்திக் மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் தாம்பரம் கமிஷனர் ரவி குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். மணிமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் ரவி தலைமையில் மணிமங்கலம் போலீசார் கோபி, விக்கி ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் கரசங்கால் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கரசங்கால் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (29), மணிமங்கலம் பகுதியை சேர்ந்த சுதாகரன் (29), கீழ்படப்பையை சேர்ந்த திவாகர் (27), கரசங்கால் பகுதியை சேர்ந்த சுந்தர் (27) ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






