பொள்ளாச்சியில் 100 சதவீத அரசு பஸ்கள் இயங்கின வங்கிகள் செயல்படாததால் வர்த்தகம் பாதிப்பு

2-வது நாளாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இருந்தபோதிலும் பொள்ளாச்சியில் 100 சதவீத அரசு பஸ்கள் இயங்கின. வங்கிகள் செயல்படாததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி
2-வது நாளாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இருந்தபோதிலும் பொள்ளாச்சியில் 100 சதவீத அரசு பஸ்கள் இயங்கின. வங்கிகள் செயல்படாததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
வேலை நிறுத்தம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மத்திய அரசு அலுவலகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் 2-வது நாளாக நேற்று பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.
இருந்தபோதிலும் பொள்ளாச்சியில் வழக்கம் போல் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓடின. இதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பஸ்சில் பெரும்பாலானோர் பயணம் செய்வதை தவிர்த்தனர். இதனால் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டும் பயணிகள் இல்லாமல் பொள்ளாச்சி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
100 சதவீத பஸ்கள் இயங்கின
பொள்ளாச்சியில் இருந்து 2-வது நாளாக கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆனால் தமிழக-கேரள எல்லை வரை மட்டும் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், முதல் நாள் வேலை நிறுத்தத்தின் போது போதிய கண்டக்டர், டிரைவர்கள் பணிக்கு வராததால் 80 சதவீத பஸ்கள் ஓடவில்லை. ஆனால் அனைவரும் பணிக்கு வந்து விட்டனர். இதனால் கோவை, திருப்பூர் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் பொள்ளாச்சியில் இருந்து 100 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்பட்டன என்றனர்.
ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக 2-வது நாளாக வங்கிகள் செயல்படவில்லை. இதன் காரணமாக பணம் செலுத்துதல், காசோலை பரிமாற்றம், பணம் எடுத்தல், ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புதல் உள்ளிட்ட வங்கி பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.
பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், கிணத்துக்கடவு, நெகமம் பகுதிகளில் உள்ள வங்கிகள் செயல்படாததால் 2 நாட்களில் ரூ.50 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதேபோன்று வேலை நிறுத்தத்தால் தபால் நிலையம் செயல்படாததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story






