கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளிடம் ஆட்டோ டிைரவர்கள் கனிவுடன் பேசவேண்டும். ஆட்டோவில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டும் ஏற்ற வேண்டும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றக்கூடாது.
இரவு நேரங்களில் சந்தேக நபர்கள் நடமாடினால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஆட்டோக்களை இயக்க கூடாது. மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்க கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
போக்குவரத்து இடையூராக ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என்றார். இதில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன், மற்றும் போலீசார், ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






