தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-
பயமுறுத்தும் தடுப்புகள்
கோவை- அவினாசி சாலையில் எல்.ஐ.சி. சிக்னலில் சாலையோரம் மழைநீர் வடிகால் உள்ளது. இதன் மீது இரும்பினால் ஆன கம்பிவலை போடப்பட்டு உள்ளது. இதனால் அதன் மீது அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் நடந்து சென்றனர். ஆனால் நாளடைவில் அந்த கம்பிவலை பழுதானது. எனவே அதன் மீது செல்வதை தடுக்க அங்கு இரும்பினால் ஆன தடுப்பு வைக்கப்பட்டு உள்ளது. அது அந்த வழியாக செல்பவர்களை பயமுறுத்தி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அந்த இரும்பு வலையை சரிசெய்ய வேண்டும்.
மேகா, கோவை.
பஸ்கள் நின்று செல்லுமா?
பொள்ளாச்சி- பல்லடம் மெயின் ரோட்டில் புளியம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு தனியார் கல்லூரி, பள்ளி உள்ளன. இந்தநிலையில், புளியம்பட்டி பஸ் நிறுத்தத்தில் பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி செல்லும் பஸ்கள் பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வரும் பஸ்கள் நிறுத்துவது இல்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புளியம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.குமார், பொள்ளாச்சி.
ஒளிராத மின்விளக்குகள்
கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் கிணத்துக்கடவு பகுதியில் மேம்பாலத்துக்கு கீழ்ப்பகுதியில் உள்ள சாலையில் மின்விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் இரவில் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சமூக விரோத செயல்கள் நடந்து வருவதுடன், குற்ற சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதான மின்விளக்குகளை சரிசெய்து அவற்றை ஒளிர வைக்க வழிவகை செய்ய வேண்டும்.
எம்.வசவை கணேசன், கிணத்துக்கடவு.
நிறுத்தப்பட்ட டவுன் பஸ்
கோவை சாய்பாபாகாலனியில் இருந்து வெள்ளாணைப்பட்டி வரை செல்லும் 40-ம் நம்பர் அரசு டவுன்பஸ் வருவது இல்லை. இதனால் இந்த பஸ்சில் சென்று வந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட அந்த பஸ்சை மீண்டும் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமார், கோவை.
மின்விளக்குகள் இல்லை
கோவை மாவட்டம் சூலூரில் இருந்து சோமனூர் செல்லும் வழியில் செங்கத்துறை-மாதப்பூர் செல்லும் சாலையில் நொய்யல் ஆறு குறுக்கிடுகிறது. அதன் மீது அமைக்கப்பட்ட பாலத்தில் மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் இதுவரை அங்கு மின்விளக்கு பொருத்தப்பட வில்லை. இதனால் இரவில் இருள் இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அங்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.
மணி, மாதப்பூர்.
கழிவுநீரால் துர்நாற்றம்
கோவை சத்தி ரோட்டில் உள்ள குரும்பபாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. அத்துடன் இரவில் சிலர் அங்கு கழிவுநீரையும் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்தப்பகுதியில் சாக்கடை போன்று கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மில்டன், குரும்பபாளையம்.
தண்ணீர் வரவில்லை
கோவை மாநகராட்சி 26-வது வார்டு பீளமேடு ஏ.டி.காலனியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு தினமும் உப்புத்தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 10 நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யவில்லை. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீர் வினியோகம் செய்யாததால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தண்ணீர் உடனடியாக வினியோகம் செய்ய அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.
பிரசாந்த் குமார், பீளமேடு.
இறைச்சி கழிவுகளால் அவதி
கோவை-மருதமலை ரோடு பி.என்.புதூரில் இருந்து கோகுலம்காலனி வழியாக இடையர்பாளையம் செல்லும் குறுக்குசாலையில் ஏராளமான இறைச்சி மற்றும் கோழிகழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன. இதனால் அங்கு கடுமையாக துர்நாற்றம் வீசுவதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இந்த சாலையில்தான் பள்ளி மாணவர்கள் பலர் செல்கிறார்கள். எனவே அவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரியா, இடையர்பாளையம்.
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அலுவலகம் அமைந்து உள்ள பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் குடிநீர் தொட்டிக்கு எதிரே கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகமாக உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்தி, சூளேஸ்வரன்பட்டி.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
பொள்ளாச்சி நகரில் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் நடந்து செல்ல முடியாமல் சாலையில் நடந்து செல்ல வேண்டிய இருக்கிறது. இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில், பொள்ளாச்சி.
Related Tags :
Next Story






