தனியார் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்


தனியார் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 March 2022 12:53 PM IST (Updated: 30 March 2022 12:53 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு,  

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் பல தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

எனவே விருப்பம் உள்ளவர்கள் காலை 10 மணிக்கு செங்கல்பட்டு, வெண்பாக்கம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும், தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
1 More update

Next Story