மண்டல தலைவரான ஆட்டோ டிரைவர்
மண்டல தலைவரான ஆட்டோ டிரைவர்மண்டல தலைவரான ஆட்டோ டிரைவர்
கோவை
கோவை மாநகராட்சி 10-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கதிர்வேல். ஆட்டோ டிரைவரான இவர் வடக்கு மண்டல தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் தலைவர், ஆணையாளர் முன்னிலையில் தலைவராக பொறுப்பேற்றார்.
ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, அவருக்கு சான்றிதழ் வழங்கினார். இதுகுறித்து கதிர்வேல் கூறும்போது, ஆரம்பத்தில் ரேஷன் கடையில் அரசு ஊழியராக பணியாற்றிய போது என்னை பணிநீக்கம் செய்தனர். அதன்பிறகு மில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தேன். கட்சிப் பணியாற்ற போதிய நேரம் கிடைக்கவில்லை. இதனால் ஆட்டோ டிரைவரானேன். தற்போது நான் வார்டு கவுன்சிலராக போட்டியிடவும், மண்டலத் தலைவராக தேர்வு செய்யவும் தி.மு.க. தலைவர்தான் காரணம். தொடர்ந்து மக்களுக்கு எனது சேவையை தொடருவேன் என்றார்.
Related Tags :
Next Story






