ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் தொழிலாளியை கொன்றேன்


ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் தொழிலாளியை கொன்றேன்
x
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் தொழிலாளியை கொன்றேன்
தினத்தந்தி 30 March 2022 10:37 PM IST (Updated: 30 March 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் தொழிலாளியை கொன்றேன்

கோவை

கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகர் நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 57). கூலி தொழிலாளி. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர் கடந்த 10 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.

 பழனிசாமி சில நேரங்களில் போதையில் வீட்டுக்கு செல்லாமல் அந்த பகுதியில் படுத்து கொள்வது வழக்கம். இந்த நிலையில், வாலிபர் ஒருவரால் பழனிசாமி கொலை செய்யப்பட்டார். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ரத்தினபுரி மேஸ்திரிமாற போயன் தெருவை சேர்ந்த ஸ்ரீ விஷ்ணு (21) என்பவர் பழனிசாமியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
ஸ்ரீவிஷ்ணு போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கம் உள்ளது. நான் குடிபோதையில் ரத்தினபுரி நாராயணசாமி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கு பழனிசாமி குடிபோதையில் படுத்திருந்தார். அவரை பார்த்தவுடன் போதையில் இருந்த எனக்கு தகாத உறவு கொள்ள ஆசை ஏற்பட்டது. 

எனவே அவரை நான் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தேன். ஆனால் பழனிசாமி என்னுடன் வர மறுத்து தகராறு செய்தார். நான் வலுக்கட்டாயமாக அவரிடம் ஓரினச்சேர்க்கைக்கு முயன்ற போது வாக்குவாதம் செய்த அவர் தகாத வார்த்தைகளால் பேசி அங்கிருந்து செல்ல முயன்றார். 

இதனால் ஆத்திரமடைந்த நான் அவரை பிடித்து கீழே தள்ளினேன். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்தனர். 

நான் பயந்து போய் அங்கிருந்து ஓடி விட்டேன். அவர் உயிரிழக்க மாட்டார் என நினைத்தேன். ஆனால் அவர் இறந்ததால் நான் கொலை வழக்கில் மாட்டி விட்டேன். இவ்வாறு அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 More update

Next Story