தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 30 March 2022 11:17 PM IST (Updated: 30 March 2022 11:17 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

சரிந்து கிடக்கும் மைல்கல் 

சாலையோரத்தில் வைக்கப்பட்டு இருக்கும் மைல்கல் புதிதாக செல்பவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கிணத்துக்கடவில் இருந்து கோதவாடிக்கு செல்லும் சாலையில் ஒரு மைல் கல் இருந்தது. அதில் கோதவாடிக்கு செல்ல 3 கி.மீ. என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த மைல் கல் திடீரென்று கீழே சரிந்து கிடக்கிறது. இதனால் புதிதாக அந்த வழியாக செல்பவர்கள் வழிதெரியாமல் இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சரிந்து கிடக்கும் அந்த மைல்கல்லை சரிசெய்ய வேண்டும்.

சிவா, கோதவாடி.

அபாய நிலையில் நிழற்குடை

 பொள்ளாச்சி-பல்லடம் மெயின்ரோட்டில் கப்பளாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை மிக மோசமான நிலையில் உள்ளதுடன், அதனை சுற்றி காலி மதுபாட்டில்கள், வாட்டர் பாட்டில்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதன் காரணமாக இந்த நிழற்குடையை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயன்படுத்த தயங்குகின்றனர். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அபாயகரமான நிழற்குடையை இடித்துவிட்டு அதே இடத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிர்மலா, பொள்ளாச்சி.

போக்குவரத்து நெரிசல்

 நெகமம் அரசு பள்ளி ரோட்டில் காலை, மாலை இரு நேரங்களில் அதிகளவில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவசர தேவைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

அருண்குமார், நெகமம்.

தாறுமாறாக செல்லும் வாகனங்கள்


  கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவு உள்ளது. இந்த பிரிவில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் தினமும் விபத்து நடந்து வருகிறது. இதன் காரணமாக இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  அருள், தொப்பம்பட்டி.

முட்புதர்கள் ஆக்கிரமிப்பு


  கோவை மணியக்காரன்பாளையம் செல்லும் சாலையில் ரவீந்திரநாத் வீதி உள்ளது. இங்கு சாலையின் நடுவே மின்கம்பம் இருக்கிறது. அத்துடன் சாலையின் இருபுறத்திலும் முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளதால் சாலை குறுகிவிட்டது. இதனால் தினமும் விபத்துகள் நடந்து வருவதுடன், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து முட்புதர்களை அகற்றுவதுடன், மின்கம்பத்தை மாற்றி சாலை ஓரத்தில் வைக்க வேண்டும்.

  பழனிசாமி, மணியகாரபாளையம்.

புகை மூட்டத்தால் அவதி


  பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட குச்சிபாளையம் கிராமத்தில் சாலை ஓரத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இந்த குப்பைகளுக்கு சிலர் தீ வைப்பதால் கடும் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த முதியவர் மற்றும் சிறுவர்கள் மூச்சுத்திணறலால் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும்.

  முரளி அஸ்வந்த், குச்சிபாளையம்.

வீணாகும் குடிநீர்


  கோவை மாநகராட்சி 56-வது வார்டு எஸ்.ஐ.எச்.எஸ். காலனி ரோடு நேதாஜிபுரத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. தற்போது குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள நிலையில் இதுபோன்று குடிநீர் வீணாகி வருவதால் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

  பாலகிருஷ்ணன், நேதாஜிபுரம்.

கழிவுநீரை அனுப்பக்கூடாது


  வெள்ளலூரில் உள்ள குப்பைக்கிடங்கில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. அதுபோன்று தற்போது மாநகர பகுதியில் உள்ள கழிவுநீரை வெள்ளலூருக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே வெள்ளலூருக்கு கழீவுநீரை அனுப்புவதை நிறுத்திவிட்டு வேறு பகுதிக்கு கழிவுநீரை அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  லோகநாதன், வெள்ளலூர்.

ஒளிராத மின்விளக்கு


  கோவை சத்தி ரோட்டில் இருந்து பாரதி நகர் வழியாக போலீஸ் குடியிருப்புக்கு செல்ல சாலை உள்ளது. இந்த சாலையில் பாரதிநகர் அருகே மின்விளக்கு கடந்த 3 நாட்களாக சரியாக ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனேவ அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து அந்த மின்விளக்கை ஒளிர செய்ய வேண்டும்.

  அரசகுமாரன், பாரதிநகர்.


1 More update

Next Story