வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்


வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 31 March 2022 9:56 PM IST (Updated: 31 March 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

தி்ண்டிவனம், 

மேல்மலையனூர் அருகே பெரியநொளம்பை கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். 
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி, கல்வி அலுவலர் சிவக்குமார், வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் புஷ்பநாதன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
1 More update

Next Story