உத்திரமேரூர் பேரூராட்சியில் நியமன குழு உறுப்பினர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
உத்திரமேரூர் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நியமன குழு உறுப்பினர்கள் மற்றும் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் அலுவலர் லதா தலைமை தாங்கினார் பேரூராட்சி தலைவர் சசிகுமார், துணைத்தலைவர் இளமதி கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தலின்போது நியமன குழு உறுப்பினராக 2-வது வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதே போல் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் பதவிக்கு கவுன்சிலர்கள் பரணி, உதயசூரியன், மைவிழிசெல்வி, நரசிம்மபாரதி ஆகியோரும் போட்டியின்றி வெற்றி பெற்றனர். அனைவரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாமல்லபுரம் பேரூராட்சியில் பணி நியமனக்குழு உறுப்பினர் தலா ஒருவர், வரி மேல் முறையீட்டு குழு உறுப்பினர் தலா 4 பேர், கவுன்சிலர்கள் மூலம் தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. இதில், பணி நியமன குழு உறுப்பினருக்கு ஒருவரும், மேல் முறையீட்டு குழு உறுப்பினருக்கு 4 பேர் என மொத்தம் 5 பேர் அ.தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யாததால் பணி நியமன குழு உறுப்பினராக அ.தி.மு.க.வை சேர்ந்த 6 -வது வார்டு கவுன்சிலர் பாம்பினோ சுகுமாரனும், மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களாக அ.தி.மு.க.வை சேர்ந்த தேவி, சீனிவாசன், சரிதா, ஜீவிதா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அப்போது மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி, பேரூராட்சி துணை தலைவர் ஜி.ராகவன், செயல் அலுவலர் வி.கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story