காஞ்சீபுரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி


காஞ்சீபுரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
x
தினத்தந்தி 1 April 2022 6:29 PM IST (Updated: 1 April 2022 6:29 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார்.

லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் புத்தளி கிராமத்தை சேர்ந்தவர் குமார். பெயிண்டர். இவர் தனது மனைவி துளசியை(வயது 48) மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு காஞ்சீபுரம் இந்திராநகர் பகுதியில் வேலை நிமித்தமாக வந்து விட்டு மீண்டும் தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

காஞ்சீபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் இவர்கள் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கனரக லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

சாவு

இதில் மோட்டார் சைக்கி்ள் தடுமாறி கீழே விழுந்தது. பின்னால் அமர்ந்து வந்த துளசி சாலையில் விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், காஞ்சீபுரம் தாலுகா போலீசார், துளசி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story