தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 1 April 2022 11:10 PM IST (Updated: 1 April 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

பழுதான சாலை 

கிணத்துக்கடவு ஒன்றியம், கோதவாடியில் இருந்து செட்டியக்காபாளையம் செல்லும் ரோட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது. அது தரமாக போடப்பட்டு உள்ளதா என்று சில நாட்களுக்கு முன்பு பட்டணம் பிரிவு அருகே தோண்டி பார்த்தனர். பின்னர் அந்த இடத்தில் சாலையை சீரமைக்கவில்லை. இதனால் சாலையில் கற்கள் பெயர்ந்து பெரிய அளவில் பள்ளம்போல் மாறிவிட்டது. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதான சாலையை சீரமைக்க வேண்டும்.
ராதாகிருஷ்ணன், கோதவாடி.

வேகத்தடை இல்லை

  கோவை மாநகராட்சி 39-வது வார்ட சுண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி சாலை அருகே இருப்பதால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியே வரும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பள்ளி அருகே சாலையில் வேகத்தடை அமைத்தால் வாகனங்கள் மெதுவாக செல்லும். அதற்கு அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.
  பார்த்திபன், சுண்டபாளையம்.

மினிபஸ்கள் இயக்கப்படுமா?

  கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து எஸ்.ஆர்.பி. மில் வழியாக நல்லாம்பாளையம், மணியகாரன்பாளையத்துக்கு இயங்கி வந்த மினிபஸ்கள் தற்போது க்இயங்குவது இல்லை. இந்த மினிபஸ்களை நம்பி பயணித்தவர்கள் தற்போது குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் இந்த வழித்தடத்தில் மினிபஸ்களை இயங்க வழிவகை செய்ய வேண்டும்.
  பழனிசாமி, மணியகாரன்பாளையம்.
  
  தினத்தந்தி செய்தி எதிரொலி:
பஸ் நிறுத்தத்துக்கு பஸ்கள் வந்தன

  கோவைப்புதூர் அண்ணாநகர், அறிவொளி நகருக்கு 3 எச், 3 என் ஆகிய அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் திரும்பி வரும்போது கோவைப்புதூர் பஸ்நிறுத்தத்துக்கு வராமல் சென்றது. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருப்பவர்கள் அவதியடைந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால் தற்போது இந்த பஸ்கள் கோவைப்புதூர் பஸ்நிறுத்தத்துக்கு வந்து செல்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  சுரேஷ், கோவைப்புதூர்.

ஆபத்தான குடிநீர் தொட்டி

  கோவையை அடுத்த சரவணம்பட்டி விசுவாசபுரம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் அருகே மிகவும் பழுதடைந்த நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. இது எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் இருப்பதால் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆபத்தான மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும்.
  மோகன்ராஜ், விசுவாசபுரம்.

பஸ்களை நீட்டிக்க வேண்டும்

  கோவை காந்திபுரத்தில் இருந்து 41 டி, 19 ஜெ ஆகிய அரசு டவுன் பஸ்கள் குமாரபாளயைம் மற்றும் கோம்பகாட்டுப்புதூர் செல்கின்றன. இந்த பஸ்களில் தினமும் ஏராளமான பயணம் செய்து வருகிறார்கள். ஆனால் இந்த பஸ்கள் சோமனூர் வருவது இல்லை. இந்த பஸ்கள் சோமனூர் வந்தால் செங்கத்துறை, குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பஸ்களை சோமனூர் வரை நீட்டித்து இயக்க வேண்டும்.
  சிவக்குமார், குமாரபாளையம்.

மணலால் விபத்து அபாயம்

  கோவை குறிச்சி சிட்கோவில் உள்ள டவுண்டானா பகுதியில் சாலை ஓரத்தில் ஏராளமான மணல் தேங்கி கிடக்கிறது. இந்த சாலை குறுகலாக இருப்பதால் எதிரே வாகனங்கள் வரும்போது சாலையை விட்டு கீழே இங்கி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு இறங்கினால் சாலை ஓரத்தில் குவிந்து கிடக்கும் மண்ணில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சாலை ஓரத்தில் தங்கி கிடக்கும் மண்ணை அகற்ற வேண்டும்.
  சகாயராஜ், குறிச்சி.

நிரம்பி வழியும் குப்பை

  கோவை அருகே உள்ள அரசூர் பிரிவில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த தொட்டியில் குபபைகள் நிரம்பி பல நாட்கள் ஆகியும் சுத்தம் செய்யாததால் அதன் அருகே கீழே ெகாட்டக்கூடிய நிலை நீடித்து வருகிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே ெதாற்றுநோய் பரவும் முன்பு நிரம்பி வழியும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
  பாண்டியன், அரசூர் பிரிவு.

குண்டும் குழியுமான ரோடு

  கோவை பீளமேட்டில் இருந்து டைடல் பார்க் வழியாக விளாங்குறிச்சி செல்ல சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் பழுதாகி குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் சாலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
  பாலசுப்பிரமணியன், கோவை.


Next Story