கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவியல், குவியலாக சேர்த்து வைத்திருக்கும் விவசாயிகள்

திறந்து 2 வாரங்களாகியும் செயல்படாததால் கொள்முதல் நிலையத்தில் நெல்லை குவியல், குவியலாக சேர்த்து வைத்திருக்கும் விவசாயிகள் நெல்லை இரவு, பகலாக பாதுகாத்து வருகின்றனர்.
திருக்கழுக்குன்றத்தை அடுத்த ஒரகடம் கிராமத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. ஒரகடம் பகுதி சுற்றுவட்டரா பகுதி கிராம விவாசாயிகள் 70-க்கும் மேற்பட்டோர் நெல்லை குவியல் குவியலாக சேர்த்து வைத்துள்ளனர். கொள்முதல் செய்ய வாகனங்கள் வரவில்லை. அதற்கான எந்த செயல்பாடுகளும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்லை இரவு, பகலாக பாதுகாத்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் மற்றும் பல்வேறு விலங்குகளால் அச்சுறுத்தல் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story