குளித்தலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலெக்டர் ஆய்வு


குளித்தலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 6 April 2022 12:33 AM IST (Updated: 6 April 2022 12:33 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

குளித்தலை, 
தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை திட்டம் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் ஒரு மரக்கன்றுக்கு ரூ.14 மானியமாக விவசாயிகளுக்கு மகோகனி, தேக்கு மற்றும் செம்மரம் ஆகிய மரக்கன்றுகள் தரப்பட்டுள்ளன. பராமரிப்பு செலவாக ஒரு மரக்கன்றுக்கு ரூ.7 வீதம் முதல் மற்றும் 2-ம் வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இதுவரை குளித்தலையை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த 52 விவசாயிகளுக்கு 33 ஆயிரத்து 220 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் இரண்யமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வளையப்பட்டி பகுதியில் விவசாயி ஒருவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் 700 மரக்கன்றுகளை சொட்டுநீர் பாசனம் மூலம் நட்டு வளர்த்து வருகிறார். 
இந்தநிலையில் குளித்தலையை சுற்றியுள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடக்கும் பல்வேறு பணிகளை  மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆய்வு செய்தார். அப்போது இரண்யமங்கலம் பகுதியில் விவசாயி நிலத்தில் நட்டு வளர்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்த திட்டம் மூலம் விவசாயிகள் எந்தெந்த வகையில் பயனடைவார்கள் எவ்வளவு தொகை அவர்களுக்கு மானியமாக வழங்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்து சென்றார். இந்த ஆய்வில் குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன், வேளாண்மை அலுவலர்கள், ஊராட்சி ஒன்றியம் மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story