இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சம் மோசடி
இளம்பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சம் மோசடி
கோவை, ஏப்.7-
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் அனிதா (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் வந்து உள்ளது. அதனை கிளிக் செய்து அனிதா பார்த்து உள்ளார். அப்போது அதில் இவர் பணிபுரியும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியின் புகைப்படத்துடன் ஒரு செய்திக்குறிப்பு இருந்தது.
அதில் ஒரு தனியார் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் இருந்து கிப்ட் கார்டுகளை வாங்கி அதனை இந்த எண்ணிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண், உடனே தனது வங்கி கணக்கை பயன்படுத்தி ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் அந்த குறிப்பிட்ட தனியார் நிறுவனத்திடம் கிப்ட் கார்டு வாங்க 5 தவணைகளாக ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் பணம் செலுத்தி உள்ளார்.
இதன்பின்னர் இதுகுறித்த விபரங்களை தனது நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கு இ-மெயில் அனுப்பினார்.
இந்த மெயிலை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக அனிதாவை செல்போனில் தொடர்பு கொண்டு தான் அவ்வாறு ஏதும் கிப்ட் கார்டு எதுவும் வாங்க கூறவில்லை என்று தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுகுறித்து கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story