போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு
போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று தொடங்குகிறது.
அரியலூர்:
டி.என்.யு.எஸ்.ஆர்.பி.யால் அறிவிக்கப்பட்டுள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டாம் நிலை காவலர் பணிக்காலியிடங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 பணிக்காலியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளதையொட்டி இலவச பயிற்சி வகுப்பு இன்று (வியாழக்கிழமை) முதல் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்கு இலவச பாடகுறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மேற்குறிப்பிட்ட பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல்களுடன், கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story