பெண்ணுக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
பெண்ணுக்கு கொலை மிரட்டல் 2 பேர் கைது
திருவட்டார்:
திருவட்டார் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மேக்காமண்டபம் வலிய வீட்டுவிளையை சேர்ந்தவர் வினுகுமார். இவருடைய மனைவி விஜிகுமாரி (வயது 34). இவர் அந்த பகுதியில் உள்ள குளத்துக்கு குளிக்க சென்றார். அப்போது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த டேவிட் மகன்களான சுபின் (20), சுரேஷ் (24), ஜாண்சன் மகன் டெல்பின் (25) ஆகியோர் கிண்டல் செய்துள்ளனர். இதுபற்றி விஜிகுமாரி தனது தாயாரிடம் கூறினார். இதையடுத்து விஜிகுமாரியின் தாயார் சுபின் உள்பட 3 பேரையும் கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு விஜிகுமாரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை தகாத வார்த்தையால் பேசி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து விஜிகுமாரி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராம சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், டெல்பினை கைது செய்தனர். சுபினை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story