நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 13-ந் தேதி நடக்கிறது
நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் 13-ந் தேதி நடக்கிறது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்ட பிரிவின் சார்பாக மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் வருகிற 13-ந் தேதி காலை 9 மணியளவில் நாமக்கல்லில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் போன்ற தடகள போட்டிகள் கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காது கேளாதவர்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட உள்ளது. இதேபோல் இறகுப்பந்து, மேஜைப்பந்து, கையுந்து பந்து, எறிபந்து, கபடி போன்ற குழு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story